Monday, September 21, 2009

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகள்

பார்ப்பனீயம் என்ற சொல்லாடல் குறிப்பிட்ட ஒரு சாதியினரை மட்டும் குறிப்பதற்காவே வலைப்பதிவு எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரையும் படிக்காது, இந்துத்துவாவையும் உணராத அரைவேக்காட்டு விசிலடிச்சான் குஞ்சுகளாகவே பல வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அதனால் விளையும் பிரச்சனை என்னவென்றால் நாம் இந்த பார்ப்பனீயம் என்ற சொல்லடாலை கவனமாக பயன்படுத்த வேண்டியுள்ளது. பார்ப்பனீயம் என்றால் உடனே சாதியை சொல்லி திட்டுகிறார்கள் என அழ தொடங்கி விடுகிறார்கள். சாதி ரீதியிலான தாக்குதல்களை நாம் விரும்புவதில்லை. தனிமனித தாக்குதல்களையும் நாம் நிராகரிக்கிறோம். கருத்துக்களை, கருத்து ரீதியிலாக மோதமே நாம் விரும்புகிறோம். ஆனால் அவ்வாறு மோதுவதற்கான இடமாக வலைப்பதிவுகள் இல்லாத பரிதாப சூழலையே நாம் உணர்கிறோம்.

குறிப்பிட்ட சாதியினரை தொடர்ந்து தாக்கி கொண்டிருப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் எந்த நன்மையும் நமக்கு இல்லை. இன்றைக்கு பிராமண சாதியில் பிறக்காமல் பார்ப்பனீயவாதிகளாக திரிந்து கொண்டிருப்போரே அதிகம். உதாரணத்திற்கு நம்முடைய நண்பர் இளா போல. நண்பர் மன்னிக்க வேண்டும். இன்றைக்கு அவரது பதிவு தான் சரியான உதாரணமாக கண்ணில் பட்டது. பொதுவாகவே வலைப்பதிவுகளில் பெரும்பான்மையோர் அத்தகைய நிலையிலேயே உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

பூணூல் போடாத பார்ப்பனீயவாதிகளான இவர்கள் ஒரு புறம் இருக்க, பிறப்பால் பார்ப்பன சாதியில் பிறந்த பொழுதும் பார்ப்பனீயத்தை கடுமையாக எதிர்க்கும் எத்தனையோ நண்பர்களை சிற்றிதழ் குழுமங்களில் நான் பார்த்து இருக்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தலித், முஸ்லீம் மக்களுக்காகவும் போராடும் இந்த நண்பர்கள் இடதுசாரிக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள். மகஇக அமைப்பிலும் பல தோழர்கள் அவ்வாறு உள்ளனர்.

எனவே நாம் எதிர்ப்பது தனிப்பட்ட பிராமண சாதியில் பிறந்தவர்களை அல்ல. பார்ப்பனீய சிந்தனை (Brahmanism) கொண்டவர்களையே நாம் எதிர்க்கிறோம். இந்து சனாதானத்தை நிலை நிறுத்தும் இந்துத்துவா வெறியர்களையும் அடிப்படைவாதிகளையுமே நாம் எதிர்க்கிறோம். அவர்கள் எந்த சாதியை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் எதிர்க்கவே செய்வோம். அந்த வகையிலேயே நாம் கமலின் உன்னைப் போல ஒருவன் படத்தையும் எதிர்க்க முனைகிறோம். அதற்கு வக்காலத்து வாங்கும் இளா போன்ற விவசாய நண்பர்களையும் எதிர்க்கிறோம். நம் விவசாய நண்பரும் ஒரு பார்ப்பனீயவாதியே ஆவார்.

இந்த திரைப்படம் எவ்வாறு முஸ்லீம்களை எதிர்க்கிறது என்பதை நான் விளக்கியிருந்தேன். பெஸ்ட் பேக்கரியில் நடந்த கோரத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் போக்கு பற்றி எழுதியிருந்தது பற்றி எவரிடம் இருந்தும் சரியான விளக்கம் இல்லை. ஆனால் உடனே கமல் பிறப்பால் பிராமணர். எனவே அவரை தாக்குகிறார்கள் என திசை திருப்பும் போக்கில் சிலர் எழுத தொடங்கி விட்டார்கள்.

கமல் பஞ்சதந்திரம் போலவோ, மைக்கேல் மதன காமராஜன் போலவோ படம் எடுத்து இருந்தால், அதில் எத்தனை விதமான பார்ப்பனீயத்தனங்களை புகுத்தி இருந்தாலும் நாம் கேள்வி கேட்க போவதில்லை. ஏனென்றல் அத்தகைய குப்பைகள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. தொலைக்காட்சில் அதை விட மோசமான குப்பைகள் நாம் வீட்டிற்கே தினமும் வந்து சேருகிறது.

ஆனால் சமூக நோக்குள்ள படம், வெகுஜன மக்களின் மனசாட்சி, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை முன்னிறுத்தும் படம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் பொழுது தான் நாம் கேள்வி கேட்க நேரிடுகிறது.

அப்படி கேள்வி கேட்டால் எப்படியான பதில்கள் கிடைக்கும் என்பதற்கு என் கடந்த பதிவுக்கு வந்த மறுமொழிகளும், சுகுணா பதிவுக்கு வந்த மறுமொழிகளுமே சாட்சிகளாக உள்ளது. குறைந்தபட்ச நேர்மையுடன் கூட விவாதிக்க திரணியற்றவர்கள் தான் அனானி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் திசைதிருப்பும் போக்குகளில் முயன்று கொண்டிருக்கிறார்கள்.

வலைப்பதிவுகளை பல நண்பர்கள் மாற்று ஊடகம் என்று சொல்கிறார்கள். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை அந்த நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

10 Responses:

தண்டோரா ...... said...

காட்டாமணக்கிலிருந்து பையோடீசல் தயாரிக்கலாம்....

Anonymous said...

மிக சரியான பார்வை

‍‍ அகிலன்

கும்க்கி said...

பையோ டீசல் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது.

சீனு said...

//குறைந்தபட்ச நேர்மையுடன் கூட விவாதிக்க திரணியற்றவர்கள் தான் அனானி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.//

ஆமாமா...நேர்மையா விவாதிக்க வந்தா மட்டும் ஒழுங்கான பதில் வருமா? ஆபாச அர்ச்சனை தான் கொடுப்பீங்க. கருத்துரிமைக்கு எந்த மதிப்பும் இல்லை, உங்களை போன்றவர்களிடம்...

(பி.கு.: நான் எந்த வலையிலும் அனானி பின்னூட்டம் இட்டதில்லை)

Anonymous said...

பார்ப்பனிய சிந்தனையாளர்களான சுப்ப்ப்ப்பிற ம சாமி, சோ ராமசாமி போன்றோரை நாம் புறம் தள்ளிவிடலாம் நண்பரே, கமல், ஞானி, ஜெயகாந்தன் மிகவும் ஆபத்தானவர்கள்.தேவர்மகனுக்கு பிறகு கமலை எதோ ஒருவிதத்தில் ஜாதீயம் மற்றும் மதம் பிடித்து ஆட்டுகிறேன்றே சொல்லவேண்டும்.

ஒரு பழைய வலைப்பதிவர் said...

துலுக்கனை தீவிரவாதியாகக் காட்டிட்டா போதுமே. கோவம்பொத்துக்கொண்டு வந்து, அத்தனைபேரையும் பார்ப்பான், இந்து பாசிஸ்டு என்று திட்ட ஆரம்பித்துவிடுவீர்களே.

துலுக்கன் வீட்டிலிருந்தா உனக்கு படியளக்கிறார்கள் ? ரம்ஜானுக்கு வாங்கித் தின்ற ஒரு பிளேட் பிரியாணிக்கு இத்தனை பேச்சு ஓவரா இல்லை ?

காட்டாமணக்கு என்ன, கடுகு சைஸில் மூளையிருந்தாலும் தீவிரவாதிஎன்பவன் யார் என்று தெரியும். பகுத்தறிவு பேசும் திராவிட நிர்மூடர்களே, வான் கோழிபோல் தலையை மண்ணில் புதைத்துக்கொண்டு எவ்வளவு நாள் தான் உலகம் இருட்டு என்று நம்பப்போகிறீர்கள் ?

Anonymous said...

குத்து குத்து திருப்பிக்குத்து..
அது பத்தலன்னா எகிறிக் குத்து..!

Anonymous said...

Poi velaiya paarunga sir...
Neenga inga koovurathaala onnum perusaa entha matramum nadanthuda porathu illa.

BY,
Old Blogger.

D.R.Ashok said...

Thanks for showing sugana divakar site.

Anonymous said...

மாதவராஜ் தளத்தில் இடப்பட்ட பின்னூட்டம்

எதிர்க்கப்பட வேண்டியது பார்ப்பனீயம் தான், மாறாக அந்த சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே ஒருவரை எதிர்க்கக்கூடாது என்கிற உங்கள் கூற்று முற்றிலும் சரி ஆனால் யார் அப்படி எதிர்க்கிறார்கள் ? கமலஹாசன் பார்ப்பன சமூக‌ பின்னணி கொண்டவர் என்பதாலேயே அவரை எதிர்ப்ப‌வர்கள் யார் ? அல்லது பாரதியை அவ்வாறு எதிர்ப்பவர்கள் யார் ?

நீங்கள் கூறுவது போல‌ கமலஹாசனை ஒரு மாபெரும் கலைஞன் என்று அவருடைய‌ ஒரு பகுதியை மட்டும் (நடிப்பு,அதிலும் அவர் சிவாஜிக்கு ‘வாரிசு’) வைத்துக்கொண்டு வாழ்த்த முடியாது. அவ்வாறு செய்தால் த‌ன் காலத்தின் மாபெரும் கலைஞனாக திகழ்ந்த,கலையை தன் மக்களுக்காகவே(மக்கள் என்றால் உழைக்கின்ற மக்கள்) வடித்தெடுத்த‌ சாப்ளினுக்கும் கமலஹாசனுக்கும் வேறு பாடு இல்லாமல் போய் விடும். அவரும் கலைஞன் இவரும் கலைஞன் என்றாகி விடும் ! அது சரியா ?

கமலஹாசனுடைய பார்ப்பனச்சார்பு பளீர் என்று பருண்மையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை,அது மிகவும் சூக்குமமானதாக இருக்கலாம், சில சமயம் பெரியார்,கம்யூனிசம் என்று அவருக்கான‌ ஊறுகாயுடன் முற்போக்கும் கலந்திருக்கலாம்,அதாவது பாரதியை போல. நான் கமலஹாசனை ஒரு ‘பார்ப்பன பாசிஸ்ட்’ என்று கூறவில்லை.பாசிச கருத்தை பேசுபவனெல்லாம் பாசிஸ்ட் இயக்கத்தில் இருக்க வேண்டியதுமில்லை.ஆனால் கலஹாசனுக்கு தனது பார்ப்பன சமூகத்தின் மேண்மை பற்றிய பெருமை இருக்கிறது.

பாரதி பற்றி இனியும் சொல்வதற்கென்ன இருக்கிறது ? சொல்லியும் ஆகப்போவது ஒன்றுமில்லை.அனைத்தும் உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நன்றாகத் தெரியும் எனவே பாரதி பற்றிய கதையை இத்துடன் விட்டுவிடுகிறேன்.