வலைப்பதிவுகளில் சனநாயகம், சுதந்திரம் என்ற கூக்குரல்கள் கேட்கின்றன. இக் கூக்குரல் எழுப்பும் பலரும் பகுதி நேர எழுத்தாளர்கள். எழுத்தை தங்கள் வாழ்க்கைத் தேவைக்காக அல்லாமல் எழுத்தை பொழுது போக்குக்காக கையாளுபவர்கள். இவர்களில் எத்தனை பேர் தங்களுடைய முழு நேர வேலையில் சுதந்திரமாக இருக்கிறார்கள். முழுநேர வேலைகளில் முழு சுதந்திரம் எங்கேயும், எப்பொழுதும் கிடைக்காது. நம்முடைய எண்ணத்தை கூட அலுவலக அரசியல்களுக்கும், நம் வாழ்க்கை தேவைக்கும் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்து விட்டு இங்கே சுதந்திரத்திற்காக குரல் எழுப்புகிறார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் சுதந்திரமான எழுத்துக்கும் ஒரு விலை உண்டு. இன்று குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களாக இருக்கும் பலர் எழுத்தினை தங்களின் முழு நேர தொழிலாக கொண்டவர்கள். அவர்கள் ஆரம்பகாலங்களில் எதிர்கொண்ட பிரச்சனைகளை நோக்கினால் வலைப்பதிவுகளில் எழுத்து சுதந்திரம் நிறையவே உள்ளது.
ஒரு முக்கியமான எழுத்தாளர். பல முக்கியமான படைப்புகளை முன்வைத்த படைப்பாளி. எழுத்தினை தன்னுடைய முழு நேர வேலையாக கொண்டவர். எழுதுவதை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. பத்திரிக்கையில் எழுத வேண்டியவர், தன்னுடைய வயிற்று தேவைக்காக ப்ரூப் ரீடராக வேலைப் பார்த்தார்.
பத்திரிக்கைகளில் தங்கள் படைப்புகள் வந்தால் தான் வீட்டில் சோறு என்ற நிலையில் எத்தனையோ எழுத்தாளர்கள், எழுத்து குறித்து ஒன்றுமே தெரியாத உதவி ஆசிரியர்களின் திருத்தங்களில் தங்கள் எழுத்துக்கள் சிதைந்து போவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் சுதந்திரம் பறிபோவதை விரும்பாத சிலர், தங்கள் கொள்கைகளை கட்டிக் கொண்டு வாழ்க்கையில் போராடி போராடியே தோற்று போயிருக்கிறார்கள்.
பத்திரிக்கைகளில் எழுதிய பத்திரிக்கையளாரின் எந்த எழுத்தும் திருத்தம் செய்யாமல் வெளியானதில்லை. பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட எந்த புத்தகமும் திருத்தங்கள் இல்லாமல் வெளியானதில்லை. சினிமா பாடலாசிரியன் மெட்டுக்கு பாட்டு எழுதுவது போல எழுத்தாளன் துட்டுக்கு எழுத்தினை எழுத வேண்டியது தான்.
இந்த வட்டத்திலே நுழையாமல் சிற்றிதழ்களில் எழுத்தை எழுதி, பிற வேலைகளை தங்கள் வாழ்க்கை தேவைக்காக கொண்டவர்களை நான் அறிவேன். அவர்கள் எழுத்தை காதலிப்பவர்கள். தங்கள் எழுத்து சிதைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டவர்கள்.
அப்படி பலரை பார்த்து விட்டு வலைப்பதிவுக்கு வந்த எனக்கு வருத்தமாக இருக்கிறது. நான் எழுத்தாளன் அல்ல. பெரும்பாலும் வாசகன் மட்டுமே. ஆனால் எழுத்தை மதிப்பவன்.
தமிழ்மணத்திலே எழுத்தினை மதிக்கும் சிலரை மட்டுமே நான் இது வரை பாத்திருக்கிறேன். எழுத்தினை மதித்து அந்த எழுத்துக்கு மரியாதையுடன் எழுதும் எவரும் இங்கு அதிகம் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. எழுத்தினை காதலிக்க வேண்டும். அப்படி காதலிப்பவன் மொக்கைகளை எழுத மாட்டான். எழுத்தை நேசிப்பான். அந்த எழுத்துக்கு நியாயம் செய்வான்.
வெறும் பொழுதுபோக்காக எழுதும் பொழுது தான் மொக்கைகளை உண்டாக்க முடியும். தமிழ்மணத்தின் பதிவர்கள் அப்படி பொழுதுபோக்காக எழுதி எழுத்தை கெடுக்கிறார்கள். இதிலே சுதந்திரம் பற்றி பேசுவது தான் கொடுமையாக உள்ளது. பத்திரிக்கை உலகிலும், பதிப்பகங்களிலும் உள்ளது போல இங்கு எந்த எழுத்தும் தணிக்கை செய்யப்படவில்லை. சுதந்திரம் பற்றி பகுதி நேரமாக பேசுபவர்கள் முதலில் தங்கள் முழு நேர வேலையில் சுதந்திரம் பெறட்டும்.
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி
10 months ago
31 Responses:
மன்னிக்கனுங்க. இந்தப் பதிவுல எனக்கு உ_டன்பாடு இல்லை. ஏன்னா ___________( போன பதிவுக்கு நீங்க வெச்ச தலைப்பை இங்கே சேர்த்துக்கவும்)
ஒரு பின்னூட்டத்தை அழிச்சத்துக்காக ஒரு பதிவு போடுறீங்க.ஆனா பல பேரோட பதிவுகளுக்கு ஒரு இடம் இல்லைன்னு சொன்னா ஒப்பாரி வெச்சதா அர்த்தமுங்களா?
//மொக்கைகளை உண்டாக்க //
இதுல எனக்கு 100% உடன்பாடு உண்டு பல பதிவர் சந்திப்புல பேசியாச்சு. ஒரு விஷயத்தை பல பேர் பல முறை பேசினாவே மொக்கைதாங்க. இப்போவும் அதுதான் நடக்குது(அந்நியன் வசனத்தை ஞாபகப்படுத்திக்குங்க). கொஞ்ச நேரம் கழிச்சு விளக்கமா சொல்றேன்.(சாப்பிட்டுட்டு இருக்கேன்)
நான் என்ன சொல்றேன்னா, உங்க பதிவுல ஒரு மறுமொழி உங்கள் கருத்துக்கு விரோதமா இருந்த உடனே நீக்கி விட்டீங்க. ஆனா மத்தவங்க மட்டும் சனநாயகமா நடந்து கொள்ள வேண்டும் என்கிறீர்கள். இது எந்த விதத்துல நியாயம்.
hypocrisy, hypocrisy, hypocrisy :)
காட்டாமணக்கு சார்,
///தமிழ்மணத்திலே எழுத்தினை மதிக்கும் சிலரை மட்டுமே நான் இது வரை பாத்திருக்கிறேன். எழுத்தினை மதித்து அந்த எழுத்துக்கு மரியாதையுடன் எழுதும் எவரும் இங்கு அதிகம் இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.////
///பத்திரிக்கைகளில் தங்கள் படைப்புகள் வந்தால் தான் வீட்டில் சோறு என்ற நிலையில் எத்தனையோ எழுத்தாளர்கள், எழுத்து குறித்து ஒன்றுமே தெரியாத உதவி ஆசிரியர்களின் திருத்தங்களில் தங்கள் எழுத்துக்கள் சிதைந்து போவதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்./////
எழுத்து ஒரு புனிதமான வேலை; அதை நேசிக்கணும் -னு சொல்வது ஒரு வித தூய்மைவாதம். எழுத்துக்காக வேலைக்கு செல்லாமல் அரை பட்டினி கிடப்பவன் சுயநலவாதிதான். அவனைச் சார்ந்தவர்களையும் பட்டினி போடுகிறானல்லவா?
///இவர்களில் எத்தனை பேர் தங்களுடைய முழு நேர வேலையில் சுதந்திரமாக இருக்கிறார்கள். முழுநேர வேலைகளில் முழு சுதந்திரம் எங்கேயும், எப்பொழுதும் கிடைக்காது. நம்முடைய எண்ணத்தை கூட அலுவலக அரசியல்களுக்கும், நம் வாழ்க்கை தேவைக்கும் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்து விட்டு இங்கே சுதந்திரத்திற்காக குரல் எழுப்புகிறார்கள். ///
கருத்துச் சுதந்திரத்தை தவிர வேறு எல்லாவற்றிக்கும் பல்வேறு அளவுகளில் தடைகள் உண்டு. சட்டம் அதை அங்கீகரிக்கிறது. சொல்லப் போனால் சட்டமே அதைச் செய்கிறது. ஆனால் கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக சட்டம் தருகிறது. அதில் தேவையின்றி கை வைக்கப்பட்டால் கோபம் வருவது தவிர்க்க முடியாது.
பிறகு,
உங்கள் முந்தய பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை வெளியிடுவதில் அசொவ்கரியம் உள்ள உங்களுக்கு இப்பதிவை எழுத எப்படி கைவருகிறது? நடிக்கிறோம் என்று கூச்சமில்லையா? O!! இதுதான் எழுத்தின் விலையா?
Mohan, You are hurrying to make conclusions so quickly :))
Moderating comments is not my full time job nor i am a full time blogger looking at my blog 24x7
I do it at my own time and i published both your comments now
You can see it
be cool and have fun :))
Mohan, Just saw your comment time
You posted one comment at 1Am and another comment at 3AM (EST)
But you should not expect others to be at computer at 1Am and 3Am to approve the comments :))
அடடா! முந்தய பதிவுக்கு நான் இட்ட பின்னூட்டம் நீங்கள் அடுத்த பதிவு போட்ட பின்பும் வெளியிடவில்லை என நினைத்து விட்டேன், இடைப்பட்ட காலம் குறுகியதாக இருப்பினும். அப்பின்னூட்டம் போடும் முன்பே இப்பதிவை வெளியிட்டுவிட்டீர்கள் என்பதை கவனிக்க வில்லை.
எனினும் மையம் அதுபற்றியல்ல, உங்களது ஏனைய கருத்து பற்றித்தான்!
Mohan,
Based on my understanding, freedom of expression is not curtailed here. The aggregator has brought in some criteria for the blogs to get listed in one of their featured sections. Any Institution has its right to decide which articles have to be listed in their featured sections.
The blogs are still shown in TamilManam
Am I right ? Correct me if i am wrong
in that case, how are you saying Feedom of expression is curtailed ?
///Based on my understanding, freedom of expression is not curtailed here.///
இருட்டடிப்பு என்பது என்ன? நம் கருத்தை தடை செய்வதா? அல்லது கருத்தை வலிந்து புறக்கணிப்பதா? புறக்கணிப்பதுதான் இருட்டடிப்பு என்றால் தமிழ்மணம் செய்தது என்ன? தமிழ்மணம் செய்தது இருட்டடிப்பென்றால் இருட்டடிப்பு கருத்து பறிப்பு இல்லையா? இல்லையென்று நீங்கள் சொன்னால் நான் முட்டாளா? அல்லது நீங்கள் அறிவாளியா?
///The aggregator has brought in some criteria for the blogs to get listed in one of their featured sections.///
விமர்சனம் செய்வதே அதைத்தான்.
///Any Institution has its right to decide which articles have to be listed in their featured sections.///
இந்த போன்ற வரி எல்லா நிறுவனங்கள் வெளியிடும் டிஸ்கியிலும் இருக்கும். கூகிள் ப்ளாக்கர் உட்பட. கூகிள் உங்கள் சுதந்திரத்தில் தலையிடுகிறதா? மேலும் தமிழ்மணம் செய்துள்ள அறிவிப்பை பாருங்கள். நீங்கள் சொல்லும் அந்த உரிமையை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்று. டோண்டு வெளியிட்ட கடைசிப் பத்து பதிவுகளில் எது அவர்கள் சொல்லும் ஒழுக்க விதிக்கு எதிரானது? கோவியின் அந்த குறிப்பிட்ட பதிவைவிட கேவலமான தலைப்புக்கள் வைத்து எவரும் பதிவுகள் போடவே இல்லையா? இப்போதும் போட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். கட்டம் கட்டத்தெரிந்த தமிழ்மணத்திற்கு சொதப்பாமல் பதில் தர தெரியவில்லை.
///The blogs are still shown in தமிழ்மணம்///
அப்படியா? தமிழ்மணத்தின் சுட்டிதாருங்கள், சென்று பார்க்கிறேன்.
///Am I right ? Correct me if i am wrong////
எப்படி திருத்துவது? :-))))
////in that case, how are you saying Feedom of expression is curtailed ?///
மீண்டும் பின்னூட்டத்தை முதலில் இருந்து படியுங்கள்!!?! :-)))
மோகன்,
நீங்கள் முட்டாளா என்பதை நான் எப்படி சொல்ல முடியும் :)))
நீங்கள் முட்டாளோ, அறிவாளியோ தெரியாது. ஆனால் அவசரகுடுக்கை என்பது தெரியும் :)))
என்ன நடந்தது என்பது கூட ஆராயாமல், நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் எழுதிய உங்கள் மறுமொழியை நான் வெளியிடவில்லை என்று முடிவு செய்து விட்டீர்கள். இத்தனைக்கும் நான் இளாவை என் மறுமொழியை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பி கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் மறுமொழியை எப்படி வெளியிடமால இருக்க முடியும் ? அப்படி எதையும் அவசரமாக முடிவு செய்யும் நீங்கள், இந்த விஷயத்தில் மட்டும் நிதானமாக ஆராய்ந்து பிரச்சனைகளை புரிந்து தெளிவு பெற்றிருக்கிறீர்கள் என நான் நம்புவில்லை :)))
உங்கள் நண்பர்களின் சார்பாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் தொனியிலேயே புரிந்து கொண்டிருக்கிறேன். உடனே நான் தெளிந்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் முட்டாளா என கேட்காதீர்கள் :))
நீங்கள் சொன்ன டோண்டுவின் பதிவுகள், மறுமொழிகளை தமிழ்மணத்தில் இன்றும் கூட பார்த்தேன். அதனால் இங்கு கருத்துரிமை மறுக்கப்படவில்லை, மறைக்கப்படவில்லை என்பதை நான் தெளிவாகவே உணர்கிறேன்.
சூடான இடுகைகளில் வராமல் தடுத்து உள்ளார்கள். சூடான இடுகைகளில் வராமல் தடுத்தாலேயே கருத்துரிமை மறுக்கப்பட்டு விட்டது என்று பேசினால் நீங்கள் ஆனந்த விகடனுக்கும், குமுதத்திற்கும் கதைகள் எழுதி அனுப்புங்கள். அவர்கள் அதனை வெளியிடவே மாட்டார்கள். என் கதையை வெளியிடவில்லை. ஆனந்த விகடன் என் கருத்துரிமையை இருட்டடிப்பு செய்து விட்டது என்று கூறுங்கள். பக்கத்தில் இருக்கிற கீழ்பாக்கத்திற்கு தான் அனுப்பி வைப்பார்கள்.
பிரபல பதிவர்களான உங்களைப் போன்றவர்களுக்கு தான் உண்மை புரியும், தெளியும் என்றால் உங்களைப் போன்றவர்களையும், இளா போன்ற பிரபல பதிவர்களைப் பற்றி இரண்டு மறுமொழியிலேயே தெரிந்து கொண்டு விட்டேனே :)))
பதிவர்கள் மூத்தோர், புதியோர் என்று பிரிந்து போராடாமல் ஒன்றாக தமிழ்மணம் நிர்வாகிகளிடம் நிர்வாகத்தினை மூத்தபதிவர்களிடம் ஒப்படைக்கச் சொல்லவேண்டும். அப்படி ஒப்படைக்காவிட்டால் தங்கள் பதிவுகளைத் தமிழ்மணத்திலிருந்து நீக்கவேண்டும். வருமானம் இழக்கும் தமிழ்மணம் நிர்வாகிகள் இறங்கித்தான் வருவார்கள்.
புதிய நிர்வாகிகளாக டோண்டு, லக்கிலுக், கோவி கண்ணன் ஆகியோர் ஆக்கப்படவேண்டும். செந்தழலும் ஜ்யோராம் சுந்தரும் நிதி வழங்கும் பொறுப்பினை எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்மணம் நிர்வாகப்பதிவை மோகன் கந்தசாமியும் தமிழ்மணம் ட்விட்டரை இளாவும் நிர்வாகிக்கவேண்டும். இதனாலே வெளிப்படையான நிர்வாகத்தினைப் பதிவர்கள் பெறலாம். தற்போதைய இருட்டடிப்பு நிர்வாகிகளின் பதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படவேண்டும்.
//
நம்முடைய எண்ணத்தை கூட அலுவலக அரசியல்களுக்கும், நம் வாழ்க்கை தேவைக்கும் பலி கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி இருந்து விட்டு இங்கே சுதந்திரத்திற்காக குரல் எழுப்புகிறார்கள்.
//
ஆக, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அங்க அடங்கி இருக்கீங்கள்ல, இங்கயும் அடங்கி இருங்க...
இது தான் நீங்கள் சொல்ல வருவது என்றால்....வாழ்க நீவிர்!
//
அப்படி காதலிப்பவன் மொக்கைகளை எழுத மாட்டான். எழுத்தை நேசிப்பான். அந்த எழுத்துக்கு நியாயம் செய்வான்.
//
ஐயா, இங்கு யாரும் இலக்கியம் எழுதுவதாக கூறிக் கொள்வதில்லை..தாங்கள் நினைப்பதை எழுதுவது தான் ப்ளாக்.... எழுத்தை நேசிப்பவர்கள் மட்டும் தான் எழுத வேண்டும் என்பது என்ன வரையறை?? இவர்கள், இவர்கள் மட்டும் தான் எழுதலாம் என்று எப்படி சொல்ல முடியும்??
//
தமிழ்மணத்தின் பதிவர்கள் அப்படி பொழுதுபோக்காக எழுதி எழுத்தை கெடுக்கிறார்கள்
//
மன்னிக்க....பதிவு எழுதுபவர்கள் பலரும் தமிழ்மணத்திடம் இருந்து ஊதியம் பெறவில்லை....தமிழ்மணத்தின் பதிவர்கள் என்று அழைப்பது முறையா?
//
சுதந்திரம் பற்றி பகுதி நேரமாக பேசுபவர்கள் முதலில் தங்கள் முழு நேர வேலையில் சுதந்திரம் பெறட்டும்.
//
தங்கள் அறிவுரைக்கு நன்றி...மிக்க நன்றி!!!
அங்கே அடங்கி இருக்கிறாய், இங்கேயும் அடங்கி இரு என சொல்லவில்லை. அப்படி புரிந்து கொண்டவர்களிடம் என்ன பேசுவது என்றும் தெரியவில்லை.
பேசிப் பார்க்கிறேன்.
பதிவை தணிக்கை செய்தால் சுதந்திரம் பறிபோய் விட்டது என அலறலாம். ஆனால் ஒரு திரட்டியின் ஒரு ஓராமாக உள்ள பகுதியில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதால் என் சுதந்திரம் போய் விட்டது என ஒப்பாரி வைப்பது அசிங்கமாக இருக்கிறது.
எழுதுங்கள், எதை வேண்டுமானாலும் எழுங்கள். மஞ்சள் பத்திரிக்கைகள் முதல் செக்ஸ் பத்திரிக்கைகள் வரை எல்லாமே எழுத்து தான்.
நான் எழுத்தை புனித படுத்தவில்லை. எழுத்தை உண்மையாக நேசிப்பவர்கள், காதலிப்பவர்கள் வலைப்பதிவுகளில் குறைவாக இருக்கிறார்கள் என கவலைப்படுகிறேன். பொழுது போக்கிற்காக எழுதுகிறவர்கள் அதிகரித்து விட்டார்கள் என கவலைப்படுகிறேன். என் கவலை எனக்கு. அதை ஏன் அறிவுரை கூறுவதாய் எடுத்துக் கொள்கிறீர்கள்.
உங்களிடம் என்ன பேசுவது என புரியவில்லை
இவ்விடுகைக்கு நன்றி.
ஒவ்வொரு துறையிலும் வெகுஜன இதழ்களால் புறக்கணிக்கப் படும் சமூக அக்கறை சிற்றிதழ்களில் தஞ்சமடைவது தமிழ்ச்சூழலில் வழக்கம். ஒவ்வொரு துறையிலும் சிற்றிதழ்களை நடத்திக் கொண்டிருக்கும் தோழர்கள் படும் பாடு சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் இணையம் சமூக அக்கறையுள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். எத்தனையோ நல்ல எழுத்துக்களைப் படிக்க முடிகிறது. அதற்காக நன்றியுடன் நம்மால் ஏதாவது பங்களிக்க முடியுமா என்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இப்படியும் கூட சிலர் தங்களை முதிர்ந்த எழுத்தாளர்களாகப் பிரபலப் படுத்திக் கொண்டு, சிறுபிள்ளைத்தனமாக எழுதி எல்லொருடைய நேரத்தையும் வீணடிக்க முடியும் என்று நினைத்தால் இணையமும் விதிவிலக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களை அடையாளம் காட்டியமைக்கு நன்றி.
வாழ்க பிரபல பதிவர்களும், அவர்களது இரசிகர்களும் !!
நன்றி - சொ.சங்கரபாண்டி
சொ.சங்கரபாண்டி,
என்னுடைய ஆதங்கமும் உங்களுடையது போன்றது தான்
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
அண்ணா நீங்க சொல்ற மாதிரி இந்த பிரபல பதிவர்கள்-ங்கற பட்டத்தை இவங்களுக்கு யாரு கொடுத்தா. ரொம்ப வருஷம் கிறுக்கினா அவரு மூ(பீ)த்த பதிவராம். கழுதைக்கு கூட தான் வயசு ஆவுது அதுக்காக கழுதைய பெரிய மனுசன்னு பார்க்கமுடியுமா. அட எழுத்து ஸ்டைல் நல்லா இருந்தாக் கூட தொலயுது அது அவனோட கருத்துன்னு படிச்சு தொலைக்கலாம். இந்த தொரபைகளுக்கு எழுதவும் வராது. இதுல லக்கி லுக் மாதிரி சிலரின் (வெகு சிலர்) எழுத்து தான் பரவாயில்லை. இந்த இளா, மோ.க. எழுத்தை இன்னும் படிக்கவில்லை. அவர்கள் கருத்து கந்தசாமியின் நன்பர்கள் என்பதால் அதே மாதிரி இலக்கில்லாத எழுத்தாக இருக்குமோ என்ற என் நினைப்பு அவர்கள் எழுத்தைப் படிக்க தடையாய் இருக்கிறது.
சமயந்த ராஜீவன்
கருத்து கந்தசாமி தமிழ்மன நிர்வாகத்தில் பங்கெடுக்கும் வையில் ஒரு அனானி எழுதியிருகீறார். அது நக்கல் தானே உன்மை இல்லையே. அது மட்டும் உன்மையா இருந்தா அவ்வளவு தான் அவர் பதிவை தவிர வேற எதுவுமே இருக்காது, அத்தனையயும் அழித்து விடும் அந்த மண்டு.
நம்ம க.க.- யோட பதிவில ஒரு சின்ன பின்னூட்டம் அவர் கருத்துக்கு மாறா இருந்தாக் கூட வெளிவராது. அத்தனை தொட்டால் சினுங்கி அவர். வெளியிட விரும்புவது எல்லாம், அருமையானபதிவு (அ) அழகான ஆழமான பதிவு, நெத்தியடி போன்ற கமண்ட்ஸ் தான். நான் வலையில் வெளியிட்ட கருத்துக்கு என்னை வலயில் எதிர்கொள்ளாமல் என் "தல" கிட்ட அழுது எனக்கு அழுத்தம் வர செய்திட்டார். அந்தக் கோழை இன்று கூக்குரல் இடுவது வேதனை தான்.
சிங்கை சின்னத்தம்பி.
////நீங்கள் முட்டாளா என்பதை நான் எப்படி சொல்ல முடியும் :)))
நீங்கள் முட்டாளோ, அறிவாளியோ தெரியாது.////
ஆம். உங்களுக்கு தெரியாது; எனக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. நான் உங்களைவிட முட்டாள் அல்ல என்பது தான் அது.
///என்ன நடந்தது என்பது கூட ஆராயாமல், நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் எழுதிய உங்கள் மறுமொழியை நான் வெளியிடவில்லை என்று முடிவு செய்து விட்டீர்கள். இத்தனைக்கும் நான் இளாவை என் மறுமொழியை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பி கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் மறுமொழியை எப்படி வெளியிடமால இருக்க முடியும் ? ////
வருந்தும் தொனியில் பதிலளித்த பிறகு, அதை மீண்டும் பேசுபவர் அநாகரீகமானவர். நீங்கள் எந்த அநாகரீக அரிதாரத்துடன் மேடை ஏறினாலும் அது பற்றி கவலையில்லை. அம்பலம்தான் முக்கியம்.
///அப்படி எதையும் அவசரமாக முடிவு செய்யும் நீங்கள், இந்த விஷயத்தில் மட்டும் நிதானமாக ஆராய்ந்து பிரச்சனைகளை புரிந்து தெளிவு பெற்றிருக்கிறீர்கள் என நான் நம்புவில்லை :)))////
நீங்கள் எதைவைத்து எதை முடிவு செய்கிறீர்கள் என நினைத்துப் பார்த்தால் எத்தகையவரிடம் வாதம் செய்கிறோம் என்ற மிரட்சி ஏற்படுகிறது. ஜ்யோராம் சுந்தர் உங்களுக்கு இட்ட பின்னூட்டம் மற்றும் அதற்கு நீங்கள் தந்த விளக்கம் போன்றவை நினைவுக்கு வருகின்றன.
////உங்கள் நண்பர்களின் சார்பாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்கள் தொனியிலேயே புரிந்து கொண்டிருக்கிறேன். உடனே நான் தெளிந்து தான் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் முட்டாளா என கேட்காதீர்கள் :))///
இதென்ன தானே கேள்வி தானே பதிலா?
///நான் முட்டாளா என கேட்காதீர்கள் :))//////
சரி, நீங்கள் முட்டாளா என கேட்கட்டுமா? அதை கேட்கத்தேவையில்லை என்பது தெளிவு.
////நீங்கள் சொன்ன டோண்டுவின் பதிவுகள், மறுமொழிகளை தமிழ்மணத்தில் இன்றும் கூட பார்த்தேன். அதனால் இங்கு கருத்துரிமை மறுக்கப்படவில்லை, மறைக்கப்படவில்லை என்பதை நான் தெளிவாகவே உணர்கிறேன்.////
ஸ்ஸப்பா...!! இப்பவே கண்ண கட்டுதே!! சூடான இடுகைகளின் தணிக்கை பற்றி பேசுகிறோமா அல்லது பின்னூட்டங்களை வெளியிட்டு கருத்து சுதந்தரத்தை நிலைநாட்டுவது பற்றி பேசுகிறோமா என்று மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தினால் நல்லது.
////சூடான இடுகைகளில் வராமல் தடுத்து உள்ளார்கள். சூடான இடுகைகளில் வராமல் தடுத்தாலேயே கருத்துரிமை மறுக்கப்பட்டு விட்டது என்று பேசினால்///
அநியாயமாக, போதிய விளக்கங்கள் தராமல் தடுக்கப்பட்டுள்ளது என திருத்திக்கொள்ளுங்கள். ஏனையோரின் பதிவுகளும் நீக்கப்பட்டவர்களின் பதிவுகள் போலவே இருக்கும் நிலையில் இவர்களை நீக்கியது கட்டம் கட்டுவதாகும்.
///நீங்கள் ஆனந்த விகடனுக்கும், குமுதத்திற்கும் கதைகள் எழுதி அனுப்புங்கள். ///
கவலையை விடுங்கள். செல்லப்பெட்டி எடிட்டர் மாமாக்கள் கையில் என் கதை சிக்காது. ஏனென்றால் எனக்கு கதை எழுத தெரியாது.
///அவர்கள் அதனை வெளியிடவே மாட்டார்கள். ///
உங்கள் அனுதாபத்திற்கு என்னால் என்ன கைம்மாறு செய்யமுடியும்?!!?? கண்கள் குளமாகின்றன.
////ஆனந்த விகடன் என் கருத்துரிமையை இருட்டடிப்பு செய்து விட்டது என்று கூறுங்கள்///
அச்சு ஊடகத்தை இணையப்பக்கங்களுடன் ஒப்பிடும் உங்கள் முதிர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
///பக்கத்தில் இருக்கிற கீழ்பாக்கத்திற்கு தான் அனுப்பி வைப்பார்கள்.///
உங்களுக்கு அருகிலேயே ஒரு இடம் தயார் செய்யுங்கள். வந்துவிடுகிறேன்.
////பிரபல பதிவர்களான உங்களைப் போன்றவர்களுக்கு///
அடச்சே!!!
///இளா போன்ற பிரபல பதிவர்களைப் பற்றி இரண்டு மறுமொழியிலேயே தெரிந்து கொண்டு விட்டேனே :)))///
இதற்கு என் பதில் தேவையில்லை.
லக்கிலுக் புத்தகத்தை பாரா ஒரு வெட்டு கூட வெட்டாமல் மொட்டை மாடியில் வெளியிட்டாரா ? தெரிந்து கொள்ள ஆசை
///அச்சு ஊடகத்தை இணையப்பக்கங்களுடன் ஒப்பிடும் உங்கள் முதிர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.///
ஐயா மோகன் கந்தசாமி, தாங்க முடியலை. நீங்க எப்பவுமே இப்படி தானா ? தமிழ் வலைப்பதிவுல விவாதம் பண்றது கஷ்டகாலம்டா :)))
ஒரே விஷயம் சொல்றேன். விகடன்.காம்ல ஒரு புது விஷயம் பண்ணியிருக்காங்க. தெரியாட்டி பார்த்து தொலைங்க.
என்னை ஆளை விடுங்க :))
////பதிவர்கள் மூத்தோர், புதியோர் என்று பிரிந்து போராடாமல் ஒன்றாக தமிழ்மணம் நிர்வாகிகளிடம் நிர்வாகத்தினை மூத்தபதிவர்களிடம் ஒப்படைக்கச் சொல்லவேண்டும்.///
ஆஹா! விமர்சனங்களை தமிழ்மணம் எதிர்கொள்ளும் விதம் அருமை.
////அப்படி ஒப்படைக்காவிட்டால் தங்கள் பதிவுகளைத் தமிழ்மணத்திலிருந்து நீக்கவேண்டும். வருமானம் இழக்கும் தமிழ்மணம் நிர்வாகிகள் இறங்கித்தான் வருவார்கள்.////
You're either with us or against us. - முசோலினி
Either you are with us, or you are with the terrorists. - ஜார்ஜ் புஷ்
Either both or neither - தமிழ்மணம்
///புதிய நிர்வாகிகளாக டோண்டு, லக்கிலுக், கோவி கண்ணன் ஆகியோர் ஆக்கப்படவேண்டும். செந்தழலும் ஜ்யோராம் சுந்தரும் நிதி வழங்கும் பொறுப்பினை எடுத்துக் கொள்ளவேண்டும். தமிழ்மணம் நிர்வாகப்பதிவை மோகன் கந்தசாமியும் தமிழ்மணம் ட்விட்டரை இளாவும் நிர்வாகிக்கவேண்டும்///
சூப்புரப்பு!! விளக்கம் கேட்டால் ஒருநாள் முதல்வர் ரேஞ்சிக்கு நிகரான பதில் வருவது அருமை.
///இதனாலே வெளிப்படையான நிர்வாகத்தினைப் பதிவர்கள் பெறலாம். தற்போதைய இருட்டடிப்பு நிர்வாகிகளின் பதிவுகளும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படவேண்டும்.///
இது டக்கர் பதில்! எவனாவது இனி வாயைத்திறப்பனா???!!??
////ஐயா மோகன் கந்தசாமி, தாங்க முடியலை. நீங்க எப்பவுமே இப்படி தானா ? தமிழ் வலைப்பதிவுல விவாதம் பண்றது கஷ்டகாலம்டா :)))///
ஐயா டக்காடுபுக்கு...சாரி காட்டாமணக்கு, தாங்க முடியலை. நீங்க எப்பவுமே இப்படி தானா ? இந்த வலைப்பதிவுல விவாதம் பண்றது கஷ்டகாலம்டா :)))
///ஒரே விஷயம் சொல்றேன். விகடன்.காம்ல ஒரு புது விஷயம் பண்ணியிருக்காங்க. தெரியாட்டி பார்த்து தொலைங்க///
ஹயா... அங்கிள் புது பொம்மை வாங்கிட்டு வந்திருக்காருடா!
தேங்க்ஸ் அங்கிள்!!
///என்னை ஆளை விடுங்க :))///
பொறுமையா ஓடுங்க! கீழ விழுந்துடப்போறிங்க, பாத்து!
////வாழ்க பிரபல பதிவர்களும், அவர்களது இரசிகர்களும் !!
நன்றி - சொ.சங்கரபாண்டி/////
திரு. சக்கரபாண்டி, இந்த தகாத இடத்தில் என்னால் விளக்கம் அளிக்க முடியவில்லை.
////இந்த இளா, மோ.க. எழுத்தை இன்னும் படிக்கவில்லை. அவர்கள் கருத்து கந்தசாமியின் நன்பர்கள் என்பதால் அதே மாதிரி இலக்கில்லாத எழுத்தாக இருக்குமோ என்ற என் நினைப்பு அவர்கள் எழுத்தைப் படிக்க தடையாய் இருக்கிறது.
சமயந்த ராஜீவன்////
திரு. சமயந்த ராஜீவன்,
நான் அதிகம் எழுதிவிடவில்லை. ஒருசில மணிநேரங்களில் அனைத்தையும் படித்து முடித்துவிடலாம். அதனால் முன் முடிவை தவிர்த்து விடுங்கள். நன்றி.
-----------------------------------
காட்டாமணக்கு சார், வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்க சேவையை. நான் ரசிகனல்லவா! அதனால் விசில் அடிக்கிறேன், நீங்கள் அவரல்லவா! ஆகவே ...... அடியுங்கள்! ஜிங் ஜாக்..
நன்றி
நான் இணையத்தில் எழுத வருவதற்குமுன், சிறுபத்திரிகைகளிலேயே இயங்கிக் கொண்டிருந்தவன்.
சூடான இடுகைகள் குறித்த உங்களுடைய பார்வைகளுடன் மாறுபடுகிறேன். இதுகுறித்து ஒரு பதிவெழுதியிருக்கிறேன். நேரம் கிடைத்தான் பாருங்கள். எதேச்சதிகாரத்தை, அது எந்த வடிவத்தில் வந்தாலும், நாம் ஏற்றுக் கொள்ள இயலாது. குறைந்த பட்சம் நாம் இயங்கும் இணையச் சூழலில்!
/வாழ்க பிரபல பதிவர்களும், அவர்களது இரசிகர்களும் !!/
எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய விஷயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் தமிழ்மண நிர்வாகிகள் தமிழ்மண ரசிகர்களாக மாறி இப்படிச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லை!
ஜ்யோவ்ராம் சுந்தர்,
எதேச்சதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. என்னுடைய புரிதலுக்காகவே கேட்கிறேன். தவறாக நினைக்க வேண்டாம்.
நீங்கள் இது வரை எத்தகைய எதேச்சதிகாரத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் ? தமிழ்மணம் என்கிற இணையத்தளத்தை எவ்வாறு எதேச்சதிகாரமாக பார்க்கிறீர்கள் ?
I am not at my computer, so comment moderation will be delayed :)
I have never said to my Manager that i will not be at my desk. But in Tamil blogs, i have to say that, so pity :)))
எப்படி எதேச்சதிகாரம் என்றால்.. நான் எழுதியுள்ள பதிவை நீங்கள் படிக்கலாம்.
இதுவரையில் எத்தகைய எதேச்சதிகாரத்தை எதிர்த்திருக்கிறேன் என்றால் : ஹிஹி.. மன்னிச்சுக்குங்க எசமான் :)
என்னுடைய பயோ டேட்டாவைக் கொடுக்க விருப்பமில்லை :)
/நான் எழுதியுள்ள பதிவை நீங்கள் படிக்கலாம்./
your self confidence should be appreciated. May be that is the power of bloggerdom.
"Ignorance is a bless"
உங்கள் வருகைக்கும், நேரத்திற்கும் நன்றி சுந்தர்
எதேச்சதிகாரத்தை எதிர்க்கும் உங்கள் போரட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் :)))
எதேச்சதிகாரத்தை எதிர்த்து ஏதேனும் போராட்டங்கள் நடத்துவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள், நியாயமாக தெரிந்தால் என் பங்களிப்பினையும், நியாயத்தையும் தெரிவிக்கிறேன்.
தமிழ்நதி "ஈழத்தமிழரைக் கொன்றுகுவிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில்" கலந்து கொண்டு பதிவு எழுதியிருக்கிறார். படிக்க வேண்டும்.
வருகிறேன்...
எச்சிக்கலை பைசா விருதுத்துட்டாக தருவோமென்று சொல்லி தமிழ்மணம் பதிவர்களின் சுயமரியாதையைக் கேலி செய்கிறது. கருத்துரிமையைப் பறிக்கிறது.
சுடலைமாடன் என்பவர் நிர்வாகியாகவோ ரசிகராகவோ பாடகராகவோ கருத்துரிமை கொண்டவராகவோ இருக்க முடியாது. அது எங்கள் கருத்துரிமையை மறுக்கிறது. கருத்துரிமையைப் பற்றிப் பேசுவதால் நாங்கள் மட்டுமே கருத்துரிமை கொண்டவர்கள். அதனால் எங்களுக்கு மட்டுமே கருத்துரிமை எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது என்ற ரகசியம் தெரியும். எங்கள் கட்டுரைகளையும் எங்கள் ஜால்ராக்களின் பின்னூட்டங்களையும் வாசியுங்கள். கருத்துரிமை ஒளிஞ்சிருக்கிற இடம் பற்றி துப்பு கிடைக்கும். மத்தவர்கள் சொல்வது எல்லாம் தப்பு.
கண்டு பிடி கண்டு பிடிடா கண்ணாளா
கண்டு பிடி கண்டு பிடிடா
காட்டாமணக்கு சார்,
உங்களுக்கு வலைப்பதிவு போராட்டங்கள் பற்றி தெரியாது. சென்ற முறை எங்களுடைய கலக எழுத்தாளர் எதேச்சதிகாரத்தை எதிர்த்து இணைய ரவுடியாக மாறினார். வீச்சறுவாள், சைக்கிள் சைன் போன்ற ஆயுதங்களுடன் தமிழ்மணம் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இணைய ரவுடியாக மாறியதால் ஆசிட் பாட்டில்களை அனிமேஷன் செய்து தமிழ்மணம் நிர்வாகிகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்மணம் நிர்வாகிகள் அமெரிக்கா என்ற எதேச்சதிகார நாட்டிலே அடைக்கலம் புகுந்து விட்டார்கள்.
தமிழ்மணம் எதேச்சதிகாரம் என்பதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தமிழ்மணம் அமெரிக்காவில் இயங்குகிறது. அமெரிக்கா சட்டதிட்டங்களின்படி செயல்படுகிறது. தமிழ்மணம் நிர்வாகிகளில் பலர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எனவே தமிழ்மணம் எதேச்சதிகாரத்தை எதிர்ப்பது அமெரிக்க எதேச்சதிகாரத்தையே எதிர்ப்பதற்கு சமம். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
எதேச்சதிகாரம் பற்றி எங்களுக்கு மட்டுமே தெரியும். நீங்கள் சென்னை வந்து எங்களிடம் பாடம் எடுத்துக் கொள்ளுங்கள். லக்கிலுக், டோண்டு போன்றவர்கள் எங்களிடம் பாடம் எடுத்து தெளிவு பெற்றார்கள். அதனால் அவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களிடம் தெளிவு பெற்ற பிறகே அவர்கள் மொட்டை மாடியில் கூட்டம் போட்டார்கள்.
நீங்கள் கூட அமெரிக்காவில் இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த எதேச்சதிகாரம் உங்களுக்கு புரியவில்லை. உங்களையும் எதேச்சதிகாரத்தின் எச்சமாகவே பார்க்கிறோம். எச்சரிக்கையாக இருங்கள். சென்னை வந்தால் எங்களிடம் சொல்லி விடாதீர்கள். இணைய ரவுடியாக மாறி உங்களை துவம்சம் செய்து விடுவோம்.
Post a Comment