பிரபல பதிவர்களே, ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள். அசிங்கமாக இருக்கிறது. நீங்கள் எதுவும் எழுதி கிழித்து விட வில்லை. மற்றவர்கள் எதுவும் எழுதாமலும் இல்லை. இங்கு எழுதும் பலரின் பதிவுகள் எத்தனையோ நல்ல தகவல்களை தருகிறது. பலர் ரசிக்கும்படி எழுதுகிறார்கள். நீங்கள் எழுதியது எல்லாம் வெறும் மொக்கைகள். மொக்கைகளும் பதிவுகள் தான். நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் நீங்களே உங்கள் "பிரபல" வேடத்தை பயன்படுத்திக் கொள்வதால் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய கவனிப்பு உங்களுக்கே சென்று விடுகிறது. நல்ல பதிவுகள் மறைந்து விடுகின்றன. தமிழரங்கம் போன்ற தளத்தில் இருந்து வரும் பல நல்ல பதிவுகள் சூடாகாமல் மறைந்து போய் விடுகிறது. தெரு நாய், சொறி நாய் போன்ற பதிவுகள் சூடாகி விடுகிறது. அத்தகைய பதிவுகளை போட்டு விட்டு என் பதிவை தூக்கி விட்டார்கள் என அலறுவது அசிங்கமாக உள்ளது.
அது என்ன பிரபலம் ? பிரபல நடிகர், பிரபல நடிகை, பிரபல தொழில் அதிபர் போல பிரபல பதிவரா ? சகிக்கவில்லை. எழுத்தாளர்களில் கூட சிற்றிதழ் எழுத்தாளர்கள், தலித் எழுத்தாளர்கள், இடதுசாரி எழுத்தாளர்கள், வெகுஜன எழுத்தாளர்கள் என்று தான் சொல்வார்கள். அவர்கள் எழுத்தின் தன்மையை கொண்டே பெயர் வழங்கப்படுகிறது. ஆனால் இங்கே என்னவென்றால் பிரபல எழுத்தாளராம் ? மூத்த பதிவராம் ? சினிமா பாணியில் இருக்கும் இந்த வழக்கம் சகிக்க வில்லை. அசிங்கம்.
நான் சொல்ல வந்தது அவ்வளவு தான்
எழுதப்படாத கவிதையின் இறுதி வரி
10 months ago
30 Responses:
ஆத்தீ...ஏன் இந்த வெறி ?
நல்ல வேளை....சூடான இடுகை குறித்து எதுவும் பதிவு போடலை...இல்லைன்னா டவுசர் கிழிஞ்சிருக்கும் ஹி ஹி ஹி...
உங்களுக்கு விஷயமே புரியல்லே. சூடான இடுகை பத்தி யாருக்கு அக்கறைன்னு நெனக்கிறீங்க?
தேவையில்லாம சம்பந்தப்பட்டவங்களோட ஹிட் கவுண்டர்தான் எகிறுது. முக்கியமா அந்த பெரிசோட கவுண்டர் செந்தில் கணக்கா துள்ளுது. என்ன நான் சொல்றது?
//செந்தழல் ரவி said...
நல்ல வேளை....சூடான இடுகை குறித்து எதுவும் பதிவு போடலை...//
:-)))))
நீங்களே உங்கள் "பிரபல" வேடத்தை பயன்படுத்திக் கொள்வதால் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய கவனிப்பு உங்களுக்கே சென்று விடுகிறது. நல்ல பதிவுகள் மறைந்து விடுகின்றன.
WELL SAID. THANK YOU
வெள்ளை நிற பேக் ரவுண்டுக்கு சரியான பாண்ட் இல்லை இது...பதிவு ஒன்னும் தெரியமாட்டேங்குது...
பாண்ட் சைசையும், கலரையும் மாத்துங்க...
// ஹேமா பாஸ்கர் said...
உங்களுக்கு விஷயமே புரியல்லே. சூடான இடுகை பத்தி யாருக்கு அக்கறைன்னு நெனக்கிறீங்க?
தேவையில்லாம சம்பந்தப்பட்டவங்களோட ஹிட் கவுண்டர்தான் எகிறுது. முக்கியமா அந்த பெரிசோட கவுண்டர் செந்தில் கணக்கா துள்ளுது. என்ன நான் சொல்றது?
December 22, 2008 11:31 PM
/
இப்படி நீங்களே கமெண்ட் போட்டுக்கிட்டதுக்கு பதில் என்னோட கமெண்டுக்கு ரிப்ளை போட்டிருக்கலாம் :))))
செந்தழல் ரவி,
எனக்கு ஒரு வெறியும் இல்லை. பாண்ட் மாத்தறேன்
//நான் சொல்ல வந்தது அவ்வளவு தான்//
அது சரி.. இதுக்கே டவுசர் கிழியுதே.. இதுக்கு மேல தாங்காது சாமி..
இத அவா பாத்தாளா? :))
அண்ணே நீங்க பிரபல பதிவராகீட்டீங்க வாழ்த்துக்கள்..
அண்ணே நீங்களும் எப்ப பாரு யாரையாவது திட்றத ஸ்டாப் பண்ணி வச்சிட்டு வேற ஏதாவது உபயோகமா எழுதினா நல்லாருக்கும்ல..
கடைசியா நீங்க எழுதின எல்லா பதிவும் யாரையாவது திட்டியே இருக்கு.. (இரண்டு பதிவு தவிர )
கொஞ்சம் உங்க எழுத்த சுவாரசியமான விசயத்துக்கு திருப்பிவிட்டா நல்லாருக்கும்ல..
அவுங்கள ஒப்பாரினு சொல்லிட்டு நீங்களும் அதையேதான் பண்ணிருக்கீங்க
( அவுனுகளாலதான் என்னை மாதிரி ஆளுங்க பதிவு ஹிட் ஆகலனு)
மொதல்ல ஒரு பத்து பதினைஞ்சு பதிவு எழுதுங்க.. நல்ல பதிவா.. அப்புறம் தானா நீங்களும் வளர்ந்துருவீங்க..
அடுத்தவனையே குறை சொல்லாம நாம நம்மளை உயர்த்திக்க முயற்ச்சிக்கறதுதான் நல்லதுனு எனக்கு இஸ்கூல்ல ஒன்னாம்ப்புலயே சொல்லி குடுத்துருக்காய்ங்க..
சந்தடி சாக்கில தமிழரங்கம் சொல்லிட்டிங்களே, ஒன்னாம் நம்பர் துரோகி அது
சூடாக்குறது மக்கள் தானுங்களே. அதை தடுக்கலாமா? அதுதான் சனநாயகமா? அட தூக்கிட்டு போவட்டும், சொல்ல வேணாமா?? இவுங்க எல்லாம் பதிவு எழுத வந்தப்போ சூடான இடுகையே இல்லே. அதனால இவுங்க எல்லாம் அதை நம்பி இல்லை. ஆனாலும் ஒரு இடத்துல பிடிக்கிறப்போ தள்ளிவிட்டா ஒரு வருத்தம் கூட வரக்கூடாதா?? உங்க பின்னூட்டத்தை தமிழ்மணம் திரட்டைலைன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்?
தமிழரங்கமா? ஆஹா.. அவரா நீங்க??
ILA,
உங்க சாரு நிவேதிதா பிறந்த நாள் வாழ்த்து பதிவுல, இப்படி ஒரு கமெண்ட் எழுதினேன். அதை கமுக்கமா நீக்கி விட்டீர்கள். நீங்கள் எல்லாம் சனநாயகம் பற்றி பேசுகிறீர்கள். நல்ல வசனம்
சாருவுக்கு பிறந்த நாள் கொண்டாட்டங்களில் நம்பிக்கை உள்ளதா ?
வலைப்பதிவுகளில் சாருவுக்கு கூஜா தூக்குவது அதிகமாக தான் உள்ளது. ஏன் என்றே தெரியவில்லை :))
பிரபல பதிவர் அதிஷா அவர்களே,
உங்களிடம் பேசுவது ஒரு டாலருக்கும் உபயோகமில்லை. அதை உங்கள் மறுமொழியே வெளிப்படுத்தி விட்டது
// நீங்கள் எல்லாம் சனநாயகம் பற்றி பேசுகிறீர்கள்//
enakku charu vai theiryaathu. vaazthurathukku nalla manasu iruntha mattum podhum, kooja thevai ile. suvarottila ella naalum wishes varuthe, appo ella solla vendiyathuthaane?
இப்போ சாரு பத்தி விவாதிக்கலாமா? போன பின்னூட்டம் வெளியிட்டீங்களா>?
My question is not about Charu. My argument is, it is hypocrisy on your part to talk about Democracy when you yourself deleted one of my Comment in your blog
That too, you did not have comment moderation. My comment appeared in your post. But after it appeared in your post, you deleted it. Why did you delete my comment ?
When you are deleting my comment just because it did not suit your wish, then you don't have any right to question people's action.
I am sorry to say this, your actions are nothing but hypocrisy
வாழ்த்துற இடத்துல நீங்க திட்டி போட்ட பின்னூட்டம் தேவைங்களா? உங்களுக்கு பிடிக்காட்டி நாங்க பதிவு போட்டு வாழ்த்த கூடாதா? அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. அப்படி சம்பந்தம் வருதுன்னா, சுவரொட்டி பிரச்சினை பேசுவோம். அப்புறம் இதுக்கு வருவோம்.
//my Comment in your blog.//
atleast you should know where you have commented. That is not my blog, its a group blog, consisting of 20+ members to Convey the messages and wishes.
//hypocrisy//
:)). You never know me, thats why, Ask somebody who knows me before Commenting these kind of..
//When you are deleting my comment just because it did not suit your wish, then you don't have any right to question people's action.//
What is this point? I dont like Idly so no body can have Dosa? Make something related...
நான் திட்ட வில்லை. திட்டுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். வாழ்த்துற இடத்துல திட்ட கூடாது. சரி தான்.
ஆயிரம் பேர் படிக்கிற இடத்துல தெரு நாய், சொறி நாய் இருக்கலாமா ?
நான் கேட்ட கேள்வி - என் மறுமொழியை நீக்கிய உங்களுக்கு சனநாயகம் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
அதற்கு பதில் சொல்லுங்க. சும்மா மாத்தி மாத்தி மறுமொழி போட்டா
படிக்கிறங்க குழம்பி போயிடுவாங்க அப்படின்னு நினைக்காதீங்க. படிப்பவர்கள் புத்திசாலிகள் நீங்கள் யார் என்பது எல்லோருக்கும் உங்கள் குழப்பமான பதிலை படித்தாலே புரிந்து விடும்.
good try :))
உங்க கேள்வியும் பதிலும் உங்க பின்னூட்டதுலயே
//நான் கேட்ட கேள்வி - என் மறுமொழியை நீக்கிய உங்களுக்கு சனநாயகம் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. //
//நான் திட்ட வில்லை. திட்டுவதாகவே வைத்துக் கொள்ளுங்கள். வாழ்த்துற இடத்துல திட்ட கூடாது. சரி தான்.//
ஒத்துகிட்டாச்சு.
//ஆயிரம் பேர் படிக்கிற இடத்துல தெரு நாய், சொறி நாய் இருக்கலாமா ?//
அதுக்கு எல்லாம் கண்டனத்தை போட்டாச்சு. இல்லாட்டி திரும்ப பார்த்துட்டு வரலாம. அதுக்காக ரவி போட்ட பதிவை திட்ட கூட மனசில்லாம் விட்டாச்சு.
//good try :))//
Same to You
இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? திட்டுனதுக்கு திட்டா? கத்திக்கு கத்தியா? பழிக்குப் பழியா?
உங்க பதிலை பார்த்தாலே தெரியுது, நீங்களும் பிரபல பதிவர் தான்.
வாழ்க பிரபல பதிவர்கள், வாழ்க தமிழ்மணம், வாழ்க தமிழ் வலைப்பதிவுகள்
:))))))))
நசரேயன் பதிவுல கும்மி போய்ட்டு இருக்கு. அதனால உங்க கேள்வி இருந்தா நாளைக்கு பதில் சொல்றேன்.
கவுண்டமணி ஒரு படத்துல சொல்வது போல,"இந்தத் தொழிலதிபருங்க தொல்ல தாங்கமுடியல,புண்ணாக்கு விக்கிறவன்,பருத்திக்கொட்டை விக்கிறவன் எல்லாம் தொழிலதிபருங்கன்னு வந்துட்டானுக",அதுபோல பிரபல பதிவர்,பீர்பாட்டில் பதிவர்...என்ன அசிங்கமோ..
சந்தடி சாக்கில தமிழரங்கம் சொல்லிட்டிங்களே, ஒன்னாம் நம்பர் துரோகி அது//
அதே , அனானியா வந்து ஒருத்தர் சொன்ன கருத்தை நான் நேராவே சொல்றேன்......
அது ஒண்ணாம் நம்பர் யூஸ்லெஸ் டிஸ்யூ.......
சும்மா உக்காந்து சோ , சு.சுவாமி இவுங்களோட கருத்துக்களை கம்யூனிசப் போர்வையில் சொல்லி சுகம் காணுற இணைய இதழ் அது.
அதுக்கு , துக்ளக்கே பரவாயில்லை!!!!!- ..
நேர்மையான விமர்சனத்தை வைச்சு பின்னூட்டம் போட்டேன் ,ஆனா அதை வெளியிடலே அவுங்க...
இதென்ன சின்னப் பிள்ளைத் தனம்????
கருத்து சொல்லுங்கோன்னு பின்னூட்டப் பெட்டியை திறந்து வச்சிட்டு , கருத்து சொன்னப்புறம் அத பப்ளிஷ் பண்ணாம , ஈமெயில்ல கூட ரிப்ளை பண்ணலே....
நண்பருக்கு,
நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இவர்கள் பிரபல பதிவர்கள் தான். தொடர்ந்து நல்ல பதிவுகளை தந்துவருபவர்கள்தான். நான் தமிழ்மணம் பற்றி அறிந்திராத காலங்களில் எல்லாம் இவர்களது வலைப்பூக்களை புக் மார்க் செய்து கொண்டு படித்துவந்துள்ளேன். குறிப்பாக கோவிகண்ணன், லக்கிலுக், செந்தழல் ரவி, வரவனையான், பொட்"டீ" கடை மற்றும் பலர். இவர்களில் சிலரது பதிவுகள் தற்போது சூடான இடுகைகளில் இருந்து விலக்கப்பட்டதற்கு காரணம் அவர்களது மொக்கைப் பதிவுகள் என நீங்கள் நினைத்தால் நீங்கள் இவ்விஷயத்தைப் பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. உண்மைகாரணத்தை ஊகிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில் இப்பதிவு கிட்டத்தட்ட ஒரு அவதூறுதான்.
ஆமணக்கு தம்பீ... நீ சொல்லிகிறது எல்லாம் நெஜம் தான் , உதவாக்கரங்க உடு தம்பி. இதுல அந்த பிரபல (பொய்யான) மத மறுப்பாளரை மட்டும் ஏதும் சொல்லாத அவரு அதுக்கு நாலு பதிவு போட்டு அழுதுடுவாரு! அவரைச் சுற்றிக்கினு திரியரவனுக வேற வந்து ஒருபாட்டம் அழுவானுவ. ஒரு நாள் பார்த்தா எங் குடும்பத்தை கேவலப்படுத்திடான்னுவானுஙக மறு நாள் கட்டிப் புடிச்சிகினு திரிவானுக. நீ டோன்ட் வொரியா இரு நைனா.
Mohan,
I don't have time to investigate nor i am interested in doing that. Truth will never comeup. I am baised, you are baised and everyone here are biased. What's the Guarantee that your version is true. or others version is true. Or the opposite version is true.
I am not into that politics
My argument is one's writing has to be judged by their way of writing. I don't understand the categorization like "பிரபல பதிவர்கள்". That is totally nonsense. The So called "பிரபல பதிவர்கள்" did not write anything worth while here. All they did are mostly mokkais. At least that's what i have read so far
Post a Comment