1. முத்துக்குமாரின் வீர மரணத்திற்கு பிறகு மாமாக்களும், மாமிகளும் அலறிக்கொண்டு இருப்பது தெரிகிறது. முத்துக்குமாரின் மரணம் அடங்கி இருந்த தமிழர்களின் இன உணர்வை வெளிப்படுத்தி விட்டது. அதனால் மாமக்களுக்கும், மாமிகளுக்கும் கிலி பிடித்து விட்டது
2. இன்றைய 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்களுக்கு இன உணர்வு இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பிறகான நாட்களில் உலக நடப்பை காண தொடங்கிய இந்த தலைமுறையினருக்கு எந்தளவுக்கு மொழிப் பற்றும், இனப்பற்றும் இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான சமுதாயத்தை நாம் கொண்டு இருக்கிறோமோ என்ற அச்சம் இருந்தது.
ஆனால் இன்று அந்தக் கவலைகள் எல்லாம் பறந்து போய் விட்டது. 1965ல் இருந்ததை விட மிக அதிகமான இன உணர்வு தற்பொழுது தென்படுவதாக சென்னையில் இருக்கும் என் மாமா தெரிவித்தார்.
3. மதுரையில் இந்திய தேசியக் கொடியை எரித்து இருக்கிறார்கள். முதன் முறையாக தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. எனக்கு கூட அதிர்ச்சி தான்.
4. முத்துக்குமாரை தொடர்ந்து மறைந்த "வீரத் தமிழ் மகன்" ரவி இறுதி ஊர்வலத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. தமிழ் இன உணர்வு பரவட்டும். ஆனால் தீக்குளிப்புகளும், தற்கொலைகளும் வேண்டாம்.
5. அருமைத் தம்பி முத்துக்குமார் தற்கொலை மட்டும் செய்து கொள்ள வில்லை. அவரது பேனாவையும் பேச வைத்து விட்டு தான் மறைந்தார். இன்று பேசிக் கொண்டிருப்பது அவரது தீக்குளிப்பு அல்ல. அவரது எழுத்து தான் இன்று பேசிக் கொண்டிருக்கிறது.
6. அவருடைய அந்த எழுத்து தான் மாமாக்களையும், மாமிகளையும் எரிச்சல்படுத்தியிருக்கிறது. தெளிவாக ஒரு சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்த்து விட்டானே இந்த இளைஞன் என எரிச்சல் படுகிறார்கள். அவரது மரணத்தை கொச்சைப்படுத்துவது போல உணர்ச்சிவசப்பட்டு இறந்து விட்டான் என்கிறார்கள்.
7. அருமைத் தம்பி முத்துக்குமார் உணர்ச்சிவசப்படவில்லை. தெளிவாக சிந்தித்தான். அவனுடைய மரணம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தான். அதற்கு வேண்டிய காரியங்களை நிதானமாக செயல்படுத்தி இருக்கிறான். அவன் தற்கொலையை உணர்ச்சிபூர்வமாக அணுகவில்லை. தற்கொலையை ஆயுதமாக கையில் ஏந்தினான். அந்த ஆயுதம் தான் இன்று அதிகாரத்தில் இருப்பவர்களை தூக்கம் இல்லாமல் செய்திருக்கிறது. அரசியல்வாதிகளையும், கூடவே மாமாக்களையும், மாமிகளையும் நிம்மதி இல்லாமல் செய்திருக்கிறது.
8.முத்துக்குமாரின் தியாகத்தை கொச்சைப்படுத்த எளிமையான வழி, அவன் உணர்ச்சிவசப்பட்டு விட்டான் என்பது. உணர்ச்சிவசப்படுபவன் பல மணி நேரங்கள் செலவு செய்து தீர்க்கமான மரண சாசனம் எழுத மாட்டான். உடல் முழுவதும் எரிந்து போன நேரத்திலும், இறுதி மூச்சிலும் என்னுடைய சாதி தமிழ்ச்சாதி என கூற மாட்டான். தன்னுடைய உடலின் வலியை கூட அவன் எங்கேயும் காட்டியதாக படிக்கவில்லை. அவன் அழுது அரற்றியதாக படிக்கவில்லை. ஈழத்தமிழர்களை காப்பற்றுங்கள் என்று கொள்கை முழுக்கமாகத் தான் அவன் கத்தி இருக்கிறான்.
அருமைத்தம்பியின் தியாகத்தை உணர்ச்சிமயமாகியது என கொச்சைப்படுத்தாதீர்கள். அவன் ஒரு புதிய வகை ஆயுதம் ஏந்தி இருக்கிறான்.
9.மாணவர்கள் படிக்க வேண்டும் என்று சில மாமாக்கள் பதிவு எழுதி கொண்டிருக்கிறார்கள். இதை எய்ம்ஸ் இடஒதுக்கீடு போராட்டத்தின் பொழுது இவர்கள் தெரிவித்தார்களா ? மாணவர்கள் பொங்கி எழுந்தார்கள் என்றல்லவா ஊடகங்கள் அப்பொழுது எழுதிக் கொண்டிருந்தன. இப்பொழுது மாணவர்கள் படிக்க வேண்டுமாம்.
10. நல்ல காமெடி மாமா. எங்கள் மாணவர்கள் படிக்கவும் செய்வார்கள். உங்களை படிய வைக்கவும் செய்வார்கள்.
20 Responses:
பதிவுக்கு நன்றி
மாமாக்களின் கொட்டத்தை ஒடுக்குவோம்.
தில்லையில் பெற்ற வெற்றியை முதல் வெற்றி செய்தி. இனி பல வெற்றிகள் தொடரும்
//
3. மதுரையில் இந்திய தேசியக் கொடியை எரித்து இருக்கிறார்கள்.
//
Super. KALAKKAL..
தமிழ்நாட்டு மாணவர் எழுச்சின்னா மாமாக்கள் அலறத்தானே செய்வாங்க.
ஏன்னா ஏற்கனவே ஒரு மாணவர் எழுச்சியினால இவங்க வாங்குன ஆப்பு அப்படி.
எழுச்சி என்ற சொல்லையே சொல்லத் தகுதியற்ற நக்கிப் பிழைக்கும் அந்த கூட்டத்தின் அழிவு ஆரம்பமாகி விட்டது.
சாட்டையடி நண்பா..!
பலே! பலே!!
முதலில் விஷயம் கேள்விப்பட்டவுடன் எனக்கும் தோன்றியது, ஒரு இளைஞன் உணர்ச்சி வசப்பட்டு செய்துவிட்டானோ என்று.
ஆனால் அவரது அந்த மரண சாசன அறிக்கையைப் படித்தால் யாரும் புரிந்து கொள்ளலாம், மிகத் தெளிவான அரசியல் நோக்கோடுதான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று.
இவ்வளவு விரிவாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளதைப் படித்த பின்பும், திரும்பத் திரும்ப
உணர்ச்சிவசப்பட்ட செயல் என்பது முத்துகுமாரின் உணர்வுகளைக் கேவலப்படுத்துவது.
மாணவர்கள் படிக்கவேண்டும், போராட்டங்களில் ஈடுபடக்கூடாதென்பவர்கள் எப்போதுமே அதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்களா? மண்டல் கமிஷன் எல்லாம் ஞாபகம் வந்து தொலைக்கிறதே :)
Please sign petition to Obama
in www.tamilsforobama.com
Please participate in a poll too
in www.citynews.ca/polls.aspx?pollid=4786
Please sign petition to Obama to stop war...
in www.tamilsforobama.com
Please participate in a poll too
in www.citynews.ca/polls.aspx?pollid=4786
//முத்துக்குமாரின் தியாகத்தை கொச்சைப்படுத்த எளிமையான வழி, அவன் உணர்ச்சிவசப்பட்டு விட்டான் என்பது. உணர்ச்சிவசப்படுபவன் பல மணி நேரங்கள் செலவு செய்து தீர்க்கமான மரண சாசனம் எழுத மாட்டான். உடல் முழுவதும் எரிந்து போன நேரத்திலும், இறுதி மூச்சிலும் என்னுடைய சாதி தமிழ்ச்சாதி என கூற மாட்டான். தன்னுடைய உடலின் வலியை கூட அவன் எங்கேயும் காட்டியதாக படிக்கவில்லை. அவன் அழுது அரற்றியதாக படிக்கவில்லை. ஈழத்தமிழர்களை காப்பற்றுங்கள் என்று கொள்கை முழுக்கமாகத் தான் அவன் கத்தி இருக்கிறான்.//
நன்றி!
ஈழப்பிரச்சனை பார்பனீயத்தை அளவிடும் அமிலச்சோதனையாய் இருப்பதைச் சற்று கூர்ந்து கவனிக்கும் எவரும்புரிந்து கொள்ளலாம். பார்பனீயத்தின் மேல் அறிந்தோ அறியாமலோ ஈடுபாடூ கொண்ட எவரும் ஈழப்பிரச்சனையில் தமிழர் நலனில் ஆர்வமோ, அக்கறையோ காட்டவில்லை என்பது கண்கூடு. மெலும் தமிழர்களுக்கு தனிநாடு என்பது பார்ப்பனீயத்துக்கு எதிரான ஒன்று என்பதை அவர்கள் சரியாகவே புரிந்துகொண்டுள்ளனர்.
இந்த ஈழத்தமிழர்களில் சிலர் தான் சாதிமேட்டிமை மற்றும் பக்தி போன்ற காரணங்களால் பெரியாரை இகழ்ந்தும், தூற்றியும், பார்பனீயக் கருத்துக்களுக்கும், பதிவர்களுக்கும் ஆதரவளித்தும் வந்தனர். அவர்கள் இப்போது நிலமையை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
போடா ஜாட்டான் மாமாவும்,கருணாநிதி மாமாவும் என்ன கூறினாலும் ஒன்றும் கிழிக்கமுடியாது?பார்த்தீரா?ரெண்டு மாமாவும் அய்யங்கார்(தென்கலை).
ரோம் எரியும்போது பீடில் வாசிக்க சொல்லுகிறார்கள்
என்னதான் அடிச்சாலும், தாங்குறான்யா! இவன் எவ்வளவு நல்லவன்! அப்படிங்குற வடிவேல் காமெடி தான் ஞாபகத்துக்கு வருகிறது.
உங்களுடைய இந்த அக்கறைப் பதிவில் ஒரு சந்தேகம்.
டோண்டு பதிவில் போட்ட பின்னூட்டம்.
டோண்டு,
சிலர் சொல்வது போல, "ஆடு நனையுதாம். ஓநாய் அழுததாம்" என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
அரசியல் தேவை இல்லை. போய் படிக்கிற வேலைய பாருங்க என்கிற உங்களுடைய அறிவுரை இருக்கிறதே புல்லரிக்க வைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகமயம், தாராளமயம், தனியார் மயம் கொள்கைகள் அமுலாகி வருகின்றன.
முன்பெல்லாம், 8% போனஸ் வாங்கினால், 3 அல்லது 5 ஆண்டுகள் கழித்து 10% போனஸ் கேட்டு தொழிலாளர்கள் போராடுவார்கள். இப்பொழுது, கொடுத்த 8% த்தை கொடு என்று தான் போராட்டம் நடக்கிறது.
இதே ரீதியில் தான், மாணவர்கள் போராட்டம், இளைஞர்கள் போராட்டம், நெசவாளர்கள் போராட்டம் என அனைத்து போராட்டமும் இருக்கிறது.
இதுவரை கிடைத்த அத்தனை உரிமைகளும் அமைதியாய் இருந்து கிடைத்ததில்லை. போராடி பெற்றது தான் அனைத்தும்.
“போராடாதே” என்பது அப்பட்டமான சுயநலம். இந்த போராட்டங்களில் சிலர் படிப்பை இழக்கலாம். சிலர் வாழ்வை இழக்கலாம். சிலர் உயிரையே கூட இழக்கலாம். இழப்பு இல்லாமல் போராட்டம் என்பது சாத்தியமேயில்லை.
முத்துக்குமாரின் மரண சாசனம் தெளிவாக குறிப்பிடுகிறது. “சுயநலகாரர்கள், சமரசவாதிகள் இருக்கிறார்கள். எழும் போராட்டங்களில், மக்களிடமிருந்து நல்ல தலைவர்கள் உருவாவார்கள்”. வரலாற்றிலிருந்து அவன் கற்றிருக்கிறான்.
அவன் ஒரு தீர்க்கதரிசி.
உங்கள் “அக்கறைப் பதிவு” “இழப்பதற்கு நிறைய இழக்கிற” ஒரு நடுத்தர வர்க்கத்துப் பார்வை. அதில் சுயநலம் தான் பொங்கி வழிகிறது.
உங்களுடைய இந்த அக்கறைப் பதிவில் ஒரு சந்தேகம்.
உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகிறவர்கள், பதிவர்களாக இருக்கிறார்கள்.
ஆதரவாக எழுதுகிறவர்கள், 99% அனானிகளாக வருகிறார்களே! ஏன்?
அவர் இன்னும் பதில் சொல்லவில்லை. என்ன சொல்கிறார் என பார்க்கலாம்.
நல்ல காமெடி மாமா. எங்கள் மாணவர்கள் படிக்கவும் செய்வார்கள். உங்களை படிய வைக்கவும் செய்வார்கள்////
நல்ல கட்டுரை அழகான முடிவு!
சிந்திக்க தவறும் தமிழக தலைவர்கள் வரலாற்றுச் சக்கரத்தில் நசுங்கிப் போவது உறுதி
//உங்கள் கருத்துக்கு எதிராக எழுதுகிறவர்கள், பதிவர்களாக இருக்கிறார்கள்.ஆதரவாக எழுதுகிறவர்கள், 99% அனானிகளாக வருகிறார்களே! ஏன்//
குருத்து, இப்ப அம்பிக எல்லாம் லே ஆப் சீசன்ல சும்மா இருக்காளோ இல்லியோ ? அவா பொழுது போகமா அவாளை பற்றிய உண்மை வெளிவரும் பதிவுகளை ஹேக் பண்ணுறா. அதனால பகல்ல ஆபிஎஸ் வேலை நைட்டு வயல் வேலைன்னு பிசியா இருக்க நாங்க அனாநியாதான் பின்னூட்டம் போடமுயும் .
அருமையான பதிவு நண்பரே, நன்றி !!
மாமாக்கள், மாமிக்கள் என்பதோடு "மாறர்கள்" என்கின்ற வார்த்தையையும் சேர்த்தால் அழகாயிருக்குமே....."""மாமாக்களும், மாமிகளும், மாறர்களும் அலறுவதேன்?"""""""எப்படியிருக்கிறது?
இந்த மாமா மாமிகளுடன் "கோமாளி கருணாநிதியும்" சேர்ந்துவிட்டாரே?
புது மாமா "கோமாளி கருணநிதி"
ஏண்டா அம்பி, கட்டா மணக்கு! ஒங்களுக்கு எல்லாம் மூளையே கிடையாதா? என்னிக்காவது ஒரு நாள் தனியா ஒரு மூலைல ஒக்காந்து யோசிச்சுருக்கேளோ? இந்த திராவிட திருட்டுப் பயல்கள் "தமிழ்" பேரச்சொல்லி ஒங்கள அறுவது வருஷத்துக்கு மேலா எமாத்திண்டு வராளேடா! இத இன்னும் புரிஞ்சுக்காம அசமஞ்சமா இருந்தா எப்டி?
சரி, நா சொல்ற பாயிண்ட கேளு... இந்தி எதிர்ப்பு போராட்டம்னு தலையெல்லாம் வாய கிழிச்சுது...வாலெல்லாம் தன்ன தானே பத்த வெச்சுண்டுது. அதுல ஒரு பத்து வாலு செத்து தொலஞ்சது. அவாளோட அம்மா அப்பாக்கெல்லாம் என்ன கெடச்சுது? திராவிட திருட்டுத் தலைகள் என்ன பண்ணித்து? அந்த தலைகளோட பிள்ளை, பேரன், பேத்திகள் எல்லாம் இங்கிலீஷும், இந்தியும் கத்துண்டு நன்னா சம்பாதிச்சு கொழிக்கருதுகள். முட்டாள் ஜனங்கள் மட்டும் இன்னும் இந்தி கத்துக்காம தமிழ், தமிழ் னு குண்டு சட்டில குதற ஒட்டிண்டு இருக்கறதுகள். சரி, தமிழ்..தமிழ் னு வாய கிழிக்கராளே, இந்த திராவிட திருட்டுப் பயல்கள் எல்லாம். தமிழ் மட்டுமே படிக்கிரவனக்கு என்ன குடுத்தா? ஏதாவது வேலைக்கு காரண்டி உண்டா? மூணு வேள சோறு கெடைக்குமா?
எம் ஜி ஆர் செத்து போனப்போ நூத்துக் கணக்குல தன்ன தானே எரிச்சுண்டாளே முட்டாப் பசங்க, அவாளுக்கு என்ன கெடச்சுது? அவாளோட அப்பா, அம்மா, பொண்டாட்டி குடும்பம் கதியெல்லாம் என்ன ஆச்சு? தன்ன பெத்து வளத்து ஆளாக்கின பெரியவாளுக்காக தீ குளிக்க வேண்டியது தானே? அப்பாவோ அம்மாவோ செத்துப் போனா தீ குளிப்பானுங்களா? அப்பா அம்மா விடவா எம் ஜி ஆர் ஒசத்தி?
வைகோவ தி மு க லேந்து வெள்ள தொரத்தின ஒடனே தீ குளிச்சானுன்களே ஒரு சில முட்டாப் பயலுவ, அவனுங்க குடும்பமெல்லாம் என்ன ஆச்சு? நடுவுல வைகோவும் கருணாவும், அண்ணன் தம்பி பாசம் பயாஸ்கோப்பு காமிச்சு ஒண்ணா சேந்துண்டாளே? அப்போ வைகோவுக்காக தீ குளிச்சவனெல்லாம் முட்டாளாயிட்டான் தானே?
ஜெயலலிதா தோத்துப் போனா கைய, கால, மூக்க, காத, நாக்க எலாத்தையும் வெட்டிக்கறான் வேற சில முட்டாப் பயலுங்க. அவாளெல்லாம் என்னன்னு சொல்றது? தன்னோட அப்பா அம்மாவுக்காக எதையாவது வெட்டிப்பாளா?
இப்போ கடசியா...இலங்கைத் தமிழாளுக்காக.... இன்னொரு முட்டாப்பய......எங்க போய் முட்டிக்கர்த்துன்னே தெரியலடா... கருணா, வீரமணி, ராமதாசு, திருமா, தா பாண்டி, வைகோ, எல்லா திருட்டு பயலும் வாய கிழிக்கரானுங்களே....எவனாவது தன்னோட வெரல் நகத்த வெட்டியிருப்பானா இலங்கைத் தமிழாளுக்காக? இவனுங்களோட குடும்பம் எல்லாம் எப்டி இருக்கு? நன்னா சௌக்யமா இருக்கோல்லியோ?
ஆனா முத்துக் குமாரோட குடும்பம் இப்போ எப்டி இருக்கும்? நீங்க எல்லாரும் நெனச்சு பாத்தேளோ? வாழ வேண்டிய வயசுல போயச்சேந்துட்டானே பாவி...யாரால? இந்தத் திராவிட களவாணி தலைவனுங்களால தானே? இவாள்ளாம் என்ன பண்ணா? ஒடம்ப அடக்கம் பண்ண கையோட அடுத்தாப்புல எந்த ஏமாந்த பையன் மாட்டுவான், அவனையும் உசுப்பி விட்டு தற்கொல பண்ண வச்சு அரசியல் பண்ணலாம்னு தானே அலையறா?
முத்துக்குமார் மாதிரி பசங்க தற்கொலை பண்ணிண்டா எபெஃக்ட் இருக்குமா? இல்ல இந்த திராவிட களவாணி தலைவனுங்க தற்கொல பண்ணிண்டா எபெஃக்ட் இருக்குமா? நூறு முத்துக்குமார் தற்கொல பண்ணின்டாலும் பிரயோசனம் கெடயாது. ஆனா ஒரு கருணாவோ, வைகோவோ, ராமதாசோ, வீரமணியோ, திருமாவோ, தற்கொல பண்ணிண்டா? அதோட எபெஃக்டே தனி தானே? இந்திய அரசும் திரும்பிப் பாக்கும், இலங்கை அரசும் திரும்பிப் பாக்கும். புலிகளும் திரும்பிப் பாக்கும். சண்டைய நிறுத்த நெஜமாவே ஒரு சான்சு கெடக்கும். இவனுங்கள எவனாவது சாகச்சொல்லு பாப்போம்!
"உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு" அப்டீன்னு வாய காது வரைக்கும் கிழிக்கராளோல்லியோ....ஒரே ஒரு தரம் உயிரை தமிழுக்காக விடச்சொல்லேன் பாப்போம்! அவாள விடு. நீ என்னடா பண்ண அம்பி, காட்டா மணக்கு? முத்துக்குமார் செத்ததுக்கு ஒன்னோட ப்ளாகில எழுதி கிழிக்கறையே....த்யாகம், ஆயுதம், மண்ணாங்கட்டி அப்டீன்னு, நீ தீ குளிக்க வேண்டியது தானே? முத்துக்குமார் கிட்ட இருக்கிற மொழி இன உணர்வு ஒங்கிட்ட இல்ல?
காட்டா மணக்கு! நீ மட்டும் தீ குளி.... முத்துக்குமாருக்கு நீ எப்படி எழுதினியோ, அத வுட சூப்பரா..நா ஒனக்கு என்னோட ப்ளாகில ஒரு "இறங்கர் பா" பாடறேன்!
வரட்டுமா கண்ணா...படிச்சு உருப்படற வழியப் பாரு. படிக்கவும் தெரியும்; படிய வைக்கவும் தெரியும் அப்டீன்னு டயலாக் வுட்டுண்டு டயத்த வேஸ்ட் பண்ணாத. என்ன புரிஞ்சுதா?
ஆசீர்வாதம்,
பிச்சு மாமா
paappan soothai nondalenna unakku thookkam varaathe ?? poyi kudumpaththai, pillai kuttiyai gavani... ezutha vanthuttan perisaa...poo. magane !!!
யோவ் பிச்சு மாமா,
கோஸ்வாமி தீக்குளிச்சி செத்தானே அப்ப நீ என்னா பண்ண ?
ராமர் கோயில் கட்ட நிறையப் பேர் செத்தானே, நீங்க ஆட்சியில இருந்தீங்களே, அப்ப கட்ட வேண்டியது தானே ?
போயா, போய் நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கு,
வந்துட்டாரு விளக்கெண்ணை
மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே......... மன்னிக்க வேண்டும்.....
உலக தமிழ் தலைவனின் நிலை :
1. எதிர் கட்சி யா இருக்கும் போது : போராட்டம், பொது கூட்டம், உண்ணா விரதம் எல்லாம்
2. ஆளுங் கட்சி யா இருக்கும் போது : வெறும் அறிக்கை, தீர்மானம் ... எல்லாம் காகிதத்தில் மட்டுமே. இவர் எண்ணம் எல்லாம் ஆட்சி, பதவி, பணம், குடும்பம், சொத்து மட்டுமே....
3. இவர் மிக பெரிய நடிகர் .... ராஜா தந்திரி ...
4. இவருக்கு இப்போதைய பட்டம் : தமிழின துரோகி .....
புரட்சி தலைவி நிலை ; தொழில் செய்ய நல்ல இடம் தமிழ் நாடு. வந்தமா ... சம்பதிச்சம ... எம். ஜி.ர படத்த தேர்தல் முன்னாடி காமிச்சி ஒட்டு வங்குனமா ... அவ்ளோ தான். இவருக்கு தமிழர் பத்தி கொஞ்சம் கூட எள் அளவும் எண்ணம் இல்லை. மேல் தட்டு மகாராணிக்கு மக்கள் கஷ்டம் எப்படி புரியும் ?.
அன்னை சோனியா : கணவனை கொன்றதுக்கு ஒரு இனத்தையே அழிக்கிறார் இவர் என எல்லோரும் சொல்வதற்கு ஏற்ப இந்திய உதவி செய்கிறது இலங்கைக்கு ....
காங்கிரஸ்காரர்கள் நிலை : இவர்கள் தமிழன் தனா இல்லை வேற்று நாட்டவரா இல்லை வேற்று மாநிலத்தை சேர்ந்தவரா ? கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாமல் .. வெறும் பதவி காக எல்ல வற்றையும் விட்டு கொடுத்து .... ச்ச .... இதில் மேடை பேச்சு வேறு ... மக்களை திசை திருப
்ப பேரணி வேறு ... காந்தி யுன் காங்கிரஸ் இவ்வளவு கேவல படுத்து .... பதவி மட்டுமா இவர்கள் குறி...
தமிழன் வெக்க பட வேண்டிய நிலை , கேவல பட வேண்டிய நிலை .......
முட்டாள் தமிழன் ...செம்பரி ஆடாய் வெறும் சோற்றுக்கும், சாராயத்திற்கும் கொடி பிடிக்கும் வரை .....நம் தலையை செருப்பாய் யார் வேணுமானாலும் அணிவார்கள் .... அவர்களை சொல்லி குத்தமில்லை ....
மன்னிக்க வேண்டும் என் ரத்தங்களே......... மன்னிக்க வேண்டும்.....
முட்டாள் தமிழன்
Post a Comment