Friday, December 12, 2008

மொக்கை பதிவு போடுபவர் எல்லாம் மூத்த பதிவரா ?

தினமும் ஒரு மொக்கை பதிவை ஒரு வருடம் தொடர்ந்து போட்டால் அவர் மூத்த பதிவரா ? வலைப்பதிவின் இந்த இலக்கணம் புதியதாக வலைப்பதிவிற்கு வந்திருக்கும் எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

வலைப்பதிவு தான் எனக்கு புதிது. எழுத்து எனக்கு புதிது அல்ல. சிற்றிதழ்களின் வாசிப்பில் வளர்ந்தவன். அங்கிருக்கும் சச்சரவுகளைக் கண்டவன். நண்பர்கள் மூலமாக வலைப்பதிவு அறிமுகமாகி இங்கே சில காலமாக கவனித்து இப்பொழுது பதிவையும் தொடங்கியிருக்கிறேன்.

சிலர் மூத்தப் பதிவராம். அவர்கள் அடித்துக் கொள்ளும் தெருச்சண்டைக்காக ஒரு புதிய பதிவர் அவர்களை ரிடையர் ஆக சொல்கிறாரம். மூத்தப் பதிவர் ஆசனத்திற்கு இங்கே அவசியம் என்ன ? எல்லோரும் பதிவர்களே. இந்த ஆசனங்களை கொடுத்து சிலருடைய பிம்பங்களை வளர்க்க வேண்டாம்.

மூத்த பதிவர்கள் என்ன தான் எழுதியிருக்கிறார்கள் என பார்த்தால் ஒரு நண்பர் தினம் ஒரு மொக்கையாக போட்டுக் கொண்டிருக்கிறார். சுவீடன் பெண் தொடங்கி பனி வரை மொக்கை மயம். கிளிநொச்சியில் சண்டை நடந்து கொண்டிருக்க, அதை வைத்தும் அந்த நண்பர் மொக்கை போட்டிருக்கிறார். அது அவருடைய எழுத்து உரிமை. நாம் அதை விமர்சிக்க தேவையில்லை. ஆனால் ஒரு வருடம் வலைப்பதிவில் இயங்குவதால் அவருக்கு எந்த தனி ஆசனமும் கொடுக்க தேவையில்லை. நம் பக்கத்து இருக்கையில் அவரையும் அமர வைப்போம்.

செந்தழல் ரவி, லக்கிலுக், பெயரிலி, குழலி, கோவி.கண்ணன், டோண்டு, மோகன் கந்தசாமி போன்ற பதிவர்கள் எனக்கு இந்த சண்டை மூலம் அறிமுகம் ஆனார்கள். இவர்களில் லக்கிலுக், பெயரிலி, குழலி எழுத்துக்கள் எனக்கு பிடித்துள்ளது. எழுத்து நடையில் மோகன் கந்தசாமி கவர்கிறார்.

டோண்டு சோவுக்கு வக்காலத்து வாங்குவது கொடுமையாக இருக்கிறது. அது அவர் கருத்துரிமை. ஆனால் அவரது ஒரு பதிவை வாசித்த பொழுதே அவரிடம் தர்க்கம் செய்வது எந்த பலனையும் கொடுக்க போவதில்லை என்பது தெரிந்து விட்டது.

சண்டையை நிறுத்துங்கள் என்று சொல்ல நான் யார் ? ஒன்று மட்டும் சொல்ல முடியும். எழுத்து ஒவ்வொருவருடைய சுயமுயற்சி. எழுத்துக்கு வயதில்லை. அதனால் மூத்தப் பதிவர் போன்ற வார்த்தைகள் தேவையற்றது. நாம் எல்லோரும் பதிவர்கள் தான். புதியதாக வருபவர்களுக்கு முன்பே வலைப்பதிவில் இயங்குபவர்கள் தொழில்நுட்பத்தில் உதவலாம்.

மொக்கை பதிவு போடுபவர் எல்லாம் மூத்த பதிவரா ? என்ற தலைப்பு சூடான இடுகையில் இடம் பிடிக்கத் தான். இது யாரையாவது புண்படுத்தினால் மன்னிக்கவும்

15 Responses:

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். said...

ஈரக்கொலைய கவ்விட்டண்னே.

Anonymous said...

சூப்பர் தலீவா
மூத்தப் பதிவரும் வேண்டாம், மூத்திரப் பதிவரும் வேண்டாம்

Anonymous said...

தோடா, வந்துட்டாருடா கருத்து கந்தசாமி

லக்கிலுக் said...

உங்கள் எழுத்துக்கள் எனக்கும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
லக்கி

காட்டாமணக்கு said...

நன்றி லக்கி

ஒரிஜினல் "மனிதன்",

புரியலையே

அனானிகள்
:)

dondu(#11168674346665545885) said...

//
டோண்டு சோவுக்கு வக்காலத்து வாங்குவது கொடுமையாக இருக்கிறது.//
அது உங்க பிரச்சினை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஏதோ தத்துவம் எல்லாம் எழுதியிருக்கீங்க
இனியாவது செந்தழல் கொரியாவுல இருந்து மொக்கை போடாமா இருப்பாரா ?

ம்..
அவரு திருந்த மாட்டார்.

குறைந்தபட்சம் லக்கியாவது வெட்கப்படாதீங்க சார் போஸ்டரை நீக்கலாம். அவரும் செய்ய மாட்டாரு.

இவங்க இரண்டு பேரும் தான் வலைப்பதிவை கெடுத்ததே..

காட்டாமணக்கு said...

டோண்டு,

அது என்ன டோண்டுவோ ?
எனக்கு பிரச்சனை இல்ல. உங்க பதிவை படிக்கிறவனுக்கு வர்ற எரிச்சல் தான் பிரச்சனை.
எனக்கு எரிச்சல் வராது. இப்படி நிறைய படிச்சு பழகிட்டேன் :)

காட்டாமணக்கு said...

//
இவங்க இரண்டு பேரும் தான் வலைப்பதிவை கெடுத்ததே..
//

இவங்க இரண்டு பேரு தான் வலைப்பதிவை கெடுத்தாங்கன்னா, மத்தவங்க எல்லாம் நல்லவங்களா ? என்னமோ போங்க

Dr.Rudhran said...

interesting. keep writing

காட்டாமணக்கு said...

நன்றி ருத்ரன் அவர்களே...

மோகன் கந்தசாமி said...

///எழுத்து நடையில் மோகன் கந்தசாமி கவர்கிறார்///

என்ன இது!, சீரியஸா பதிவ எழுதிட்டு நடுவில காமெடிய செருகிட்டீங்க!

காட்டாமணக்கு said...

மோகன்,

உண்மையை தான் சொன்னேன். எனக்கு பிடித்திருக்கிறது.

உங்களுக்கு ஒன்று தன்னடக்கம் அதிகமாக இருக்கிறது. அல்லது நான் எழுதுவதை ரசிக்கிறீர்கள். ஆனால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள கூச்சம் கொள்கிறீர்கள். அதில் எதுவாக இருந்தாலும் அது எனக்கு பிடிக்கவில்லை :)

Anonymous said...

//ஆனால் அவரது ஒரு பதிவை வாசித்த பொழுதே அவரிடம் தர்க்கம் செய்வது எந்த பலனையும் கொடுக்க போவதில்லை என்பது தெரிந்து விட்டது.//
u r smart. some of us learnt this after some time only.

ILA (a) இளா said...

சீக்கிரம் பிரபல பதிவர் ப்ராப்திரஸ்து. இப்படி பதிவு போட்டா சீக்கிரம் பிரபலம் ஆகிரலாம்.