Monday, December 1, 2008

மழை, வெள்ளம்- எலிக்கறி சாப்பிட்ட மக்கள்

மழை வெள்ளம் சூழ்ந்ததால் உணவு கிடைக்காத சோகத்தில் மக்கள் எலியை பிடித்து சுட்டுத்தின்ற அவலம் நடந்துள்ளது.

சிதம்பரத்தை அருகில் உள்ளது காட்டுமன்னார் கோயில்.இங்கு இருளர் காலனி உள்ளது. இந்த காலனியில் சுமார் 30 குடும்பத்தினர்க்கும் மேல் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இருளர் காலனியை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் உணவு இல்லாமல் பட்டினியால் பாதிக்கப்பட்ட அக் காலனி மக்கள் அப் பகுதியில் கிடைத்த எலிகளை பிடித்து சுட்டுத் தின்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அரசு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும், இருளர் காலனியில் சூழ்ந்துள்ள தண்ணீரை உடனே அகற்றவும் உத்தரவிட்டனர்.

அதிமுக ஆட்சியில் வறட்சியால் மக்கள் எலிக்கறி தின்பதாக திமுக பெரும் பிரச்சாரம் செய்தது நினைவுகூறத்தக்கது. இவர்களது ஆட்சியில் வெள்ளத்தில் மக்கள் அதையே சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

2 Responses:

கோவி.கண்ணன் said...

எலிக்கறி சாப்பிடுவது கிராம புறங்களில் நடப்பது தான். மற்ற நாட்களில் இதைப்பற்றி பேசாத அரசியல்வாதிகள் அரசியலுக்காக 'எலிக் கறி' பிரச்சனையை அடிக்கடி கிளப்புறாங்க.

நரிக்குறவர்கள் பூனைக்கறி கூட சாப்பிடுவார்கள்.

காட்டாமணக்கு said...

கோவி.கண்ணன்,

நீங்கள் குறிப்பிடுவது போல, அவர்கள் சுவைக்காக சாப்பிட வில்லை. வேறு எதுவும் கிடைக்காமல் சாப்பிட்டு உள்ளார்கள்.

இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி